• Nov 23 2024

கிளிநொச்சியில் 80இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உடைமைகள் மீட்பு...!samugammedia

Sharmi / Dec 8th 2023, 3:44 pm
image

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் கடந்த மாதம் 29ம் திகதி வீடு உடைக்கப்பட்டு  80இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உடைமைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த முறைப்பாட்டிற்கமைய மாவட்ட விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து களவாடப்பட்ட  80 இலட்சம்  பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உடைமைகள் மற்றும் மூன்று சந்தேக நபர்களும் கிளிநொச்சி குற்ற தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட  களவாடப்பட்ட சந்தேக நபர்களாக கணவன், மனைவி மற்றும் நகை தொழிலாளி ஒருவர் இவர்களால் களவாடப்பட்ட 57 பவுன் தங்க நகைகள், விலை உயர்ந்த ஐ போன், 198000 ரூபா பணம், 430 மில்லி கிராம் ஹெரோயன், கப்ரக வாகனம் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 





கிளிநொச்சியில் 80இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உடைமைகள் மீட்பு.samugammedia கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் கடந்த மாதம் 29ம் திகதி வீடு உடைக்கப்பட்டு  80இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உடைமைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.இந்நிலையில் குறித்த முறைப்பாட்டிற்கமைய மாவட்ட விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து களவாடப்பட்ட  80 இலட்சம்  பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உடைமைகள் மற்றும் மூன்று சந்தேக நபர்களும் கிளிநொச்சி குற்ற தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட  களவாடப்பட்ட சந்தேக நபர்களாக கணவன், மனைவி மற்றும் நகை தொழிலாளி ஒருவர் இவர்களால் களவாடப்பட்ட 57 பவுன் தங்க நகைகள், விலை உயர்ந்த ஐ போன், 198000 ரூபா பணம், 430 மில்லி கிராம் ஹெரோயன், கப்ரக வாகனம் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement