• Oct 04 2026

துபாயிலிருந்து உடலுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கம் – தொழிலதிபரால் கட்டுநாயக்கவில் பரபரப்பு!

Chithra / Oct 4th 2026, 10:46 am
image


துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர், தனது உடலில் மறைத்து தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கண்டி, பல்லேகல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தொழிலதிபரான இவர், எமிரேட்ஸ் விமான சேவையின் EK-650 விமானம் மூலம் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


அப்போது அவரது உடலில் நான்கு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 996 கிராம் எடையுடைய தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 3 கோடியே 65 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து பயணியும் தங்க நகைகளும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


அதற்கமைய, இன்று (04) அதிகாலை வரை இது குறித்து முறைப்படியான சுங்க விசாரணை நடத்தப்பட்டதுடன், இத்தங்க நகைகளை அரசுடைமையாக்கவும், குறித்த பயணிக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


துபாயிலிருந்து உடலுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கம் – தொழிலதிபரால் கட்டுநாயக்கவில் பரபரப்பு துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர், தனது உடலில் மறைத்து தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கண்டி, பல்லேகல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தொழிலதிபரான இவர், எமிரேட்ஸ் விமான சேவையின் EK-650 விமானம் மூலம் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அப்போது அவரது உடலில் நான்கு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 996 கிராம் எடையுடைய தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 3 கோடியே 65 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பயணியும் தங்க நகைகளும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அதற்கமைய, இன்று (04) அதிகாலை வரை இது குறித்து முறைப்படியான சுங்க விசாரணை நடத்தப்பட்டதுடன், இத்தங்க நகைகளை அரசுடைமையாக்கவும், குறித்த பயணிக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement