• Sep 20 2024

தங்கத்தை கடத்திய அலி சப்ரி ரஹீம் எம்.பி டுபாய்க்கு தப்பியோட்டம்..!samugammedia

Sharmi / May 27th 2023, 9:52 am
image

Advertisement

3.5 கிலோ தங்கத்தை டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு முயற்றித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்றிரவு டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று இரவு 8.50 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய்க்கு புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில், கட்சித் தலைவர்களால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டிற்கு அமைய, அலி சப்ரி ரஹீமை சுய விருப்பத்தின் பேரில் விலகிச்செல்லுமாறு முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல வழிமொழிந்துள்ளார்.

தங்கத்தை கடத்திய அலி சப்ரி ரஹீம் எம்.பி டுபாய்க்கு தப்பியோட்டம்.samugammedia 3.5 கிலோ தங்கத்தை டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு முயற்றித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்றிரவு டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று இரவு 8.50 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய்க்கு புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.நேற்று மாலை நடைபெற்ற நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில், கட்சித் தலைவர்களால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டிற்கு அமைய, அலி சப்ரி ரஹீமை சுய விருப்பத்தின் பேரில் விலகிச்செல்லுமாறு முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல வழிமொழிந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement