• Oct 06 2026

பேனாவுக்குள் தங்கக் கம்பி — காங்கேசன்துறையில் சிக்கிய நூதன முயற்சி

Chithra / Oct 6th 2026, 11:15 am
image


யாழ்ப்பாணம் -  காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான கப்பலில் தங்கத்தை கடத்த முயன்ற ஒருவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து ‘சுபம்’ கப்பல் மூலம் நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.


இதன்போது, பேனா வடிவில் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கம்பி ஒன்றை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


இதையடுத்து, தங்கத்தை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பேனாவுக்குள் தங்கக் கம்பி — காங்கேசன்துறையில் சிக்கிய நூதன முயற்சி யாழ்ப்பாணம் -  காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான கப்பலில் தங்கத்தை கடத்த முயன்ற ஒருவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து ‘சுபம்’ கப்பல் மூலம் நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.இதன்போது, பேனா வடிவில் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கம்பி ஒன்றை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.இதையடுத்து, தங்கத்தை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement