• Jan 13 2025

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

Sharmi / Jan 13th 2025, 9:37 am
image

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன், ஓய்வூதியத்தையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,கடந்த 2020ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நீக்கப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பு நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்படும்.

இதன்படி 2016 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கே ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன், ஓய்வூதியத்தையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை,கடந்த 2020ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நீக்கப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பு நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்படும்.இதன்படி 2016 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கே ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement