• Apr 27 2024

கோட்டாபய தான் காரணம்! எங்களுக்கு எதுவும் தெரியாது..! நாமல் மன்றாட்டம்

Chithra / Feb 4th 2024, 8:13 am
image

Advertisement

 

மொட்டுக் கட்சியின் ஆட்சியில் நடைபெற்ற அனைத்துவித மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தான் காரணம் என நாமல் ராஜபக்‌ச மன்றாட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ச மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் நேற்று அநுராதபுரம் அடமஸ்தானய பிரதம தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரை சந்திப்பதற்காக சென்றிருந்தனர்.

எதிர்வரும் தேர்தல்களின் போது மொட்டுக் கட்சிக்கு ஹேமரத்ன தேரரின் ஆதரவை பெற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

எனினும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பசளைத் தடை போன்ற மக்கள் விரோத தீர்மானங்கள் குறித்து ஹேமரத்ன தேரர் கடும் காட்டமான தொனியில் விமர்சித்துள்ளார்.

அதுபோன்ற தீர்மானங்கள் காரணமாக வடமத்திய மாகாண விவசாயிகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பசளைத் தடை போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்தும் கோட்டாபயவின் தனித் தீர்மானத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவற்றுக்கும் மொட்டுக் கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று நாமல் ராஜபக்‌ச அதன்போது மன்றாட்டமாக தெரிவித்துள்ளார்.

கோட்டாபய தான் காரணம் எங்களுக்கு எதுவும் தெரியாது. நாமல் மன்றாட்டம்  மொட்டுக் கட்சியின் ஆட்சியில் நடைபெற்ற அனைத்துவித மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தான் காரணம் என நாமல் ராஜபக்‌ச மன்றாட்டமாக தெரிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ச மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் நேற்று அநுராதபுரம் அடமஸ்தானய பிரதம தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரை சந்திப்பதற்காக சென்றிருந்தனர்.எதிர்வரும் தேர்தல்களின் போது மொட்டுக் கட்சிக்கு ஹேமரத்ன தேரரின் ஆதரவை பெற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது.எனினும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பசளைத் தடை போன்ற மக்கள் விரோத தீர்மானங்கள் குறித்து ஹேமரத்ன தேரர் கடும் காட்டமான தொனியில் விமர்சித்துள்ளார்.அதுபோன்ற தீர்மானங்கள் காரணமாக வடமத்திய மாகாண விவசாயிகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மொட்டுக் கட்சியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பசளைத் தடை போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்தும் கோட்டாபயவின் தனித் தீர்மானத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவற்றுக்கும் மொட்டுக் கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று நாமல் ராஜபக்‌ச அதன்போது மன்றாட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement