• Mar 31 2025

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல! சுட்டிக்காட்டிய அநுர அரசு

Chithra / Dec 5th 2024, 8:04 am
image

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  காரணமல்ல என இராஜாங்க அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக பலர் கூறுவதாக அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அந்த கூற்றுகள் தவறானவை என்று அவர் கூறியுள்ளார். 

1977ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்குள் இலங்கை ஏற்கனவே திவாலாகி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், 2022இல் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரை பதவியில் இருந்து வெளியேற்றினர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல சுட்டிக்காட்டிய அநுர அரசு  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  காரணமல்ல என இராஜாங்க அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக பலர் கூறுவதாக அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், அந்த கூற்றுகள் தவறானவை என்று அவர் கூறியுள்ளார். 1977ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்குள் இலங்கை ஏற்கனவே திவாலாகி விட்டதாக அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், 2022இல் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரை பதவியில் இருந்து வெளியேற்றினர்.

Advertisement

Advertisement

Advertisement