முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளார்.
தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி, தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் தவறிழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தத் தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக கோட்டாபய ராஜபக்ச இன்று வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மனு மீதான நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளார்.தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி, தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் தவறிழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.அதன்படி, கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், அந்தத் தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக கோட்டாபய ராஜபக்ச இன்று வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த மனு மீதான நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.