• May 12 2024

கட்சி சார்பற்றவராக மாறிய - கோட்டாபய ராஜபக்ச – நாமல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!samugammedia

Tamil nila / Apr 9th 2023, 5:36 pm
image

Advertisement

கடந்த ஆண்டு கட்சி சார்பற்றவர்கள் எனக் கூறி இலட்சக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் போராடிய போதும், இறுதியில் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமே கட்சி சார்பற்றவராக மாறியதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை மஹிந்த ராஜபக்சவே கொண்டு வந்ததாகவும், தற்போது புதிய கட்சிகளை உருவாக்கி திட்டங்களை கொண்டு வரும் தேசிய மக்கள் படையின் அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள், சீகிரி கல்லை உடைக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அலுவலகத்திற்கு வந்தவர்கள், மகிந்த ராஜபக்சவை பார்ப்பதற்காக மாத்திரம் என்றும் செயற்பாட்டாளர்களை தாக்குவதற்காக அல்ல என்றும் குறிப்பிடுகின்றார்.

அரசியலில் வன்முறையை தாம் மதிப்பதில்லை என்றும் வன்முறையை விரும்பாதவர்கள் தாம் என தெரிவித்த நாமல் ராஜபக்ச அரசியலில் உள்ள வன்முறைகளை மஹிந்த ராஜபக்ச அகற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கட்சி சார்பற்றவராக மாறிய - கோட்டாபய ராஜபக்ச – நாமல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.samugammedia கடந்த ஆண்டு கட்சி சார்பற்றவர்கள் எனக் கூறி இலட்சக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் போராடிய போதும், இறுதியில் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமே கட்சி சார்பற்றவராக மாறியதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.கொட்டிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை மஹிந்த ராஜபக்சவே கொண்டு வந்ததாகவும், தற்போது புதிய கட்சிகளை உருவாக்கி திட்டங்களை கொண்டு வரும் தேசிய மக்கள் படையின் அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள், சீகிரி கல்லை உடைக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அலுவலகத்திற்கு வந்தவர்கள், மகிந்த ராஜபக்சவை பார்ப்பதற்காக மாத்திரம் என்றும் செயற்பாட்டாளர்களை தாக்குவதற்காக அல்ல என்றும் குறிப்பிடுகின்றார்.அரசியலில் வன்முறையை தாம் மதிப்பதில்லை என்றும் வன்முறையை விரும்பாதவர்கள் தாம் என தெரிவித்த நாமல் ராஜபக்ச அரசியலில் உள்ள வன்முறைகளை மஹிந்த ராஜபக்ச அகற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement