• Sep 20 2024

தேர்தலுக்கான நிதியை அரசு ஒதுக்கியும் விடுவிக்கப்படவில்லை - மாவை குற்றச்சாட்டு! SamugamMedia

Chithra / Feb 19th 2023, 2:52 pm
image

Advertisement

தேர்தலிற்கான நிதியை அரசு ஒதுக்கியும் விடுவிக்கப்படவில்லை என மாவை குற்றம் சாட்டுகிறார். 

கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலை நடத்துவதற்கு நிதி அரசிடம் கோரியுள்ளது. ஆனால் அரசு தேர்தலிற்கான நிதியை ஒதுக்கியும் விடுவிக்கப்படவில்லை. தேர்தல் நடக்குமா இல்லையா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.

இந்த தேர்தல் முறையானது பொருத்தமற்றது என பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் கடந்த முறை நாடாளுமன்றத்தில் இந்த முறையை எதிர்த்து நிறைவேற்றப்பட்டது. சிறு திருத்தங்களுடன் இந்த முறையை மாற்றியிருக்கலாம்.

இந்த தேர்தல் முறையின்படி ஆட்சியமைக்கக் கூடிய நிலை ஏற்பட்டால், எதிரே இருக்கும் விகிதாசார உறுப்பினர்களால் இடையூராக இருக்கும். 

இது கடந்த காலங்களில் நடந்தேறியது. இதனாலேயே இந்த கலப்பு முறையை நாம் அன்று ஏற்கவில்லை.

இந்த தேர்தல் முறையால், 100 வாக்குகளைக்கூட பெறாதவர் தவிசாளராக இருக்கின்றார். வவுனியா நகர சபையில் இவ்வாறு இருக்கிறார். 

ஆட்சி அமைக்கக்கூடிய அதிகாரம் இருந்தாலும், எம்மால் ஆட்சியமைக முடியாத நிலை இந்த தேர்தல் முறையில் உள்ளது.

இப்படியான தேர்தல் முறை நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அது பாராளுமன்றில் நிராகரிக்கப்பட்டது. இந்த தேர்தலில் கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனியாக போட்டியிட்டு சிறு வாக்குகளால் விகிதாசாரத்தில் வந்து ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் தந்திரமாக போட்டியிடுகிறோம்.

தேர்தலின் பின்னர் நாங்கள் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் முயற்சிப்போம். இது ஒரு புதிய அணுகுமுறை பேசப்பட்டதாக கேள்விப்பட்டேன். ஆட்சியமைப்பின் பின் அனைத்து கட்சிகளையும் இணைத்து பயணிப்போம்.

இந்த முடிவிற்கு பங்காளி கட்சிகளும் உந்துதலாக இருந்தன. ரெலோ கட்சியின் எம்பி ஒருவர், தமிழரசு கட்சியை விபச்சார விடுதி என குறிப்பிட்டார்.

இதனால் அதிர்ப்தியடைந்தவர்கள் தனித்தனியாக போட்டியிட விரும்பினர். அதனாலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.

அதனால் பாதிப்பும் உள்ளது. பேச்சுக்கள், போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுத்து வரும் நிலையில் பிளவுபடுவதால் பாதிப்படையும். 

ஆனாலும் இவ்வாறான விடயங்களை நாம் ஒன்றாகவே முன்னெடுப்போம். 3 கட்சிகள் போட்டிவிட்டாலும் வீட்டு சின்னத்திலேயே வெற்றி பெற்றோம். ஆனால் பிரிந்துவிட்டோம் என கூறுகின்றனர்.

தனித்து போட்டியிட முடிவெடுத்த பின்பும், இனப்பிரச்சினை, நில விடுவிப்பு போன்ற விடயங்களை பேசுவதற்காக அனைவருமாக ஒன்றாகவே செயற்படுகிறோம். 

ஜனாதிபதிகான அதிகாரங்களை பயன்படுத்தி காணி விடுவிப்பு தொடர்பிலும், நில அளவீட்டை நிறுத்த வலியுறுத்தியும் பேசினோம்.

கூட்டமைபின் பிரதிநிதிகள் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான் உள்ளனர். சர்வதேச போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போதும், அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறே போதும் ஒற்றுமையாக செயற்படுவோம். நடைபெறும் தேர்தலுக்கு பின்னர் ஒன்றாக செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தர்.


தேர்தலுக்கான நிதியை அரசு ஒதுக்கியும் விடுவிக்கப்படவில்லை - மாவை குற்றச்சாட்டு SamugamMedia தேர்தலிற்கான நிதியை அரசு ஒதுக்கியும் விடுவிக்கப்படவில்லை என மாவை குற்றம் சாட்டுகிறார். கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தேர்தலை நடத்துவதற்கு நிதி அரசிடம் கோரியுள்ளது. ஆனால் அரசு தேர்தலிற்கான நிதியை ஒதுக்கியும் விடுவிக்கப்படவில்லை. தேர்தல் நடக்குமா இல்லையா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.இந்த தேர்தல் முறையானது பொருத்தமற்றது என பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் கடந்த முறை நாடாளுமன்றத்தில் இந்த முறையை எதிர்த்து நிறைவேற்றப்பட்டது. சிறு திருத்தங்களுடன் இந்த முறையை மாற்றியிருக்கலாம்.இந்த தேர்தல் முறையின்படி ஆட்சியமைக்கக் கூடிய நிலை ஏற்பட்டால், எதிரே இருக்கும் விகிதாசார உறுப்பினர்களால் இடையூராக இருக்கும். இது கடந்த காலங்களில் நடந்தேறியது. இதனாலேயே இந்த கலப்பு முறையை நாம் அன்று ஏற்கவில்லை.இந்த தேர்தல் முறையால், 100 வாக்குகளைக்கூட பெறாதவர் தவிசாளராக இருக்கின்றார். வவுனியா நகர சபையில் இவ்வாறு இருக்கிறார். ஆட்சி அமைக்கக்கூடிய அதிகாரம் இருந்தாலும், எம்மால் ஆட்சியமைக முடியாத நிலை இந்த தேர்தல் முறையில் உள்ளது.இப்படியான தேர்தல் முறை நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அது பாராளுமன்றில் நிராகரிக்கப்பட்டது. இந்த தேர்தலில் கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனியாக போட்டியிட்டு சிறு வாக்குகளால் விகிதாசாரத்தில் வந்து ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் தந்திரமாக போட்டியிடுகிறோம்.தேர்தலின் பின்னர் நாங்கள் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் முயற்சிப்போம். இது ஒரு புதிய அணுகுமுறை பேசப்பட்டதாக கேள்விப்பட்டேன். ஆட்சியமைப்பின் பின் அனைத்து கட்சிகளையும் இணைத்து பயணிப்போம்.இந்த முடிவிற்கு பங்காளி கட்சிகளும் உந்துதலாக இருந்தன. ரெலோ கட்சியின் எம்பி ஒருவர், தமிழரசு கட்சியை விபச்சார விடுதி என குறிப்பிட்டார்.இதனால் அதிர்ப்தியடைந்தவர்கள் தனித்தனியாக போட்டியிட விரும்பினர். அதனாலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.அதனால் பாதிப்பும் உள்ளது. பேச்சுக்கள், போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுத்து வரும் நிலையில் பிளவுபடுவதால் பாதிப்படையும். ஆனாலும் இவ்வாறான விடயங்களை நாம் ஒன்றாகவே முன்னெடுப்போம். 3 கட்சிகள் போட்டிவிட்டாலும் வீட்டு சின்னத்திலேயே வெற்றி பெற்றோம். ஆனால் பிரிந்துவிட்டோம் என கூறுகின்றனர்.தனித்து போட்டியிட முடிவெடுத்த பின்பும், இனப்பிரச்சினை, நில விடுவிப்பு போன்ற விடயங்களை பேசுவதற்காக அனைவருமாக ஒன்றாகவே செயற்படுகிறோம். ஜனாதிபதிகான அதிகாரங்களை பயன்படுத்தி காணி விடுவிப்பு தொடர்பிலும், நில அளவீட்டை நிறுத்த வலியுறுத்தியும் பேசினோம்.கூட்டமைபின் பிரதிநிதிகள் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான் உள்ளனர். சர்வதேச போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போதும், அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறே போதும் ஒற்றுமையாக செயற்படுவோம். நடைபெறும் தேர்தலுக்கு பின்னர் ஒன்றாக செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தர்.

Advertisement

Advertisement

Advertisement