• Nov 07 2025

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Chithra / Oct 7th 2025, 9:56 am
image

 

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர நிர்வாகக் குழு கூட்டம் இன்று  நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்தார். 

குறித்த மாவட்டத்தில் சுகாதார நிர்வாகத்தால் தன்னிச்சையாக வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அம்பாறை மாவட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. 

இதுவரை அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கவனம் செலுத்தாததால், அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று முடிவு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர நிர்வாகக் குழு கூட்டம் இன்று  நடைபெறவுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்தார். குறித்த மாவட்டத்தில் சுகாதார நிர்வாகத்தால் தன்னிச்சையாக வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அம்பாறை மாவட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதுவரை அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கவனம் செலுத்தாததால், அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று முடிவு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement