உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிடாமலே தோல்வியை அறிந்து விலகிக் கொண்டவர்கள் இன்று தேசப்பற்றாளர்கள் போல் பேசுகிறார்கள்.
இந்த நாடு இனவாதத்தால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதற்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் இன்றும் கடந்த அரசாங்கம் தான் ஆட்சியில் உள்ளது என்று நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும்.
இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றார்.
கம்மன்பில, விமல் விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும் - பிரதி அமைச்சர் மஹிந்த அதிரடி உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிடாமலே தோல்வியை அறிந்து விலகிக் கொண்டவர்கள் இன்று தேசப்பற்றாளர்கள் போல் பேசுகிறார்கள். இந்த நாடு இனவாதத்தால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதற்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் இன்றும் கடந்த அரசாங்கம் தான் ஆட்சியில் உள்ளது என்று நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும்.இனவாதத்தை முன்னிலைப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றார்.