• Nov 23 2024

கிழக்கு ஆளுநரினால் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!

Tamil nila / Jul 18th 2024, 6:56 pm
image

அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக/சாதாரண/மாற்று/ஒப்பந்த மற்றும் தினசரி அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் நிகழ்வு புதன்கிழமை  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்குபற்றலுடன்  சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அம்பாறை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம், மஹாஓயா, நாமல்ஓயா, தமண, லஹுகல, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, உஹன, போன்ற பிரதேச சபை, மாநகர சபை போன்றவற்றில் கடமையாற்றிய 419 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் ஆணையாளர் முதலமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எஸ்.எம். பி. ரத்நாயக்க, முன்னாள் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்  ஏ.மன்சூர், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம் முஷாரப் அவர்களின் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல், கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அம்பாறை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம், மஹாஓயா, நாமல்ஓயா, தமண, லஹுகல, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, உஹன, போன்ற பிரதேச சபை, மாநகர சபை ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம்  கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். அவர்களால் எவ்வித வெற்றிகரமான நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படாத  நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர  நியமனம் குறித்தும், நிரந்தர நியமனம் இல்லாததால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான  செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று  உரிய தீர்வினைப் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.

ஆளுநர் செந்தில் தொண்டமானால் உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 1350க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில்  நிரந்தர நியமனங்கள்  வழங்கி வைக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

ஒன்பது மாகாணத்திலும்  உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து பிரச்சினைகள் இருந்த போதும்  கிழக்கு மாகாண ஆளுநர் இதுக்குறித்து அதிகம் கவனம் செலுத்தி ஒரே நாளில் இந்நியமனங்களை வழங்கி வைத்தமை  என்பது பாராட்டுகிரியது  என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



கிழக்கு ஆளுநரினால் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக/சாதாரண/மாற்று/ஒப்பந்த மற்றும் தினசரி அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் நிகழ்வு புதன்கிழமை  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்குபற்றலுடன்  சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அம்பாறை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம், மஹாஓயா, நாமல்ஓயா, தமண, லஹுகல, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, உஹன, போன்ற பிரதேச சபை, மாநகர சபை போன்றவற்றில் கடமையாற்றிய 419 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் ஆணையாளர் முதலமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எஸ்.எம். பி. ரத்நாயக்க, முன்னாள் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்  ஏ.மன்சூர், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம் முஷாரப் அவர்களின் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல், கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அம்பாறை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம், மஹாஓயா, நாமல்ஓயா, தமண, லஹுகல, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, உஹன, போன்ற பிரதேச சபை, மாநகர சபை ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம்  கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். அவர்களால் எவ்வித வெற்றிகரமான நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படாத  நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர  நியமனம் குறித்தும், நிரந்தர நியமனம் இல்லாததால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான  செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று  உரிய தீர்வினைப் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.ஆளுநர் செந்தில் தொண்டமானால் உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 1350க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில்  நிரந்தர நியமனங்கள்  வழங்கி வைக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.ஒன்பது மாகாணத்திலும்  உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து பிரச்சினைகள் இருந்த போதும்  கிழக்கு மாகாண ஆளுநர் இதுக்குறித்து அதிகம் கவனம் செலுத்தி ஒரே நாளில் இந்நியமனங்களை வழங்கி வைத்தமை  என்பது பாராட்டுகிரியது  என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement