• Feb 11 2025

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்..!

Sharmi / Feb 11th 2025, 11:50 am
image

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்றையதினம்(10) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது, மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதிகாரிகளிடம் உரையாற்றிய ஆளுநர், 

கல்வித் துறையில் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில், தாமதமின்றி தங்கள் சேவைகளை திறமையாகவும் திறம்படவும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நிறுவனப் பிரச்சினைகள் மற்றும் சேவை வழங்கலில் கருத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்றையதினம்(10) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.இதன்போது, மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.அதிகாரிகளிடம் உரையாற்றிய ஆளுநர், கல்வித் துறையில் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில், தாமதமின்றி தங்கள் சேவைகளை திறமையாகவும் திறம்படவும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.நிறுவனப் பிரச்சினைகள் மற்றும் சேவை வழங்கலில் கருத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement