• Dec 24 2024

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அரசாங்கமே முழு பொறுப்பு - எழுந்த குற்றச்சாட்டு!

Chithra / Dec 24th 2024, 8:18 am
image

 

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்திவருகின்றனர்.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானத்திற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படைகளின் உறுப்பினர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளது.  

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படவுள்ளன. 

இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படைகளின் உறுப்பினர்கள் நீக்கப்பட்டமையானது அரசியல் பலிவாங்கல் நடவடிக்கையாகுமெனக் குறிப்பிடப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அரசாங்கமே முழு பொறுப்பு - எழுந்த குற்றச்சாட்டு  முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்திவருகின்றனர்.அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானத்திற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படைகளின் உறுப்பினர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளது.  அதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படவுள்ளன. இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படைகளின் உறுப்பினர்கள் நீக்கப்பட்டமையானது அரசியல் பலிவாங்கல் நடவடிக்கையாகுமெனக் குறிப்பிடப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement