• Mar 31 2025

மூன்று நாட்களுக்கு மூடப்படும் தொடருந்து கடவைகள் - மக்களுக்கு வந்த அறிவிப்பு

Chithra / Dec 24th 2024, 8:38 am
image

கம்பஹா- ஜாஎல பிரதான தொடருந்து மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவை திருத்தப் பணிகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த தொடருந்து கடவை எதிர்வரும் 28ஆம் திகதி காலை 8 மணி முதல் 29ஆம் திகதி மாலை 6 மணி வரை முற்றாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா - ஜாஎல பிரதான தொடருந்து மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவை எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு தொடருந்து திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

மூன்று நாட்களுக்கு மூடப்படும் தொடருந்து கடவைகள் - மக்களுக்கு வந்த அறிவிப்பு கம்பஹா- ஜாஎல பிரதான தொடருந்து மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவை திருத்தப் பணிகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, குறித்த தொடருந்து கடவை எதிர்வரும் 28ஆம் திகதி காலை 8 மணி முதல் 29ஆம் திகதி மாலை 6 மணி வரை முற்றாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கம்பஹா - ஜாஎல பிரதான தொடருந்து மார்க்கத்தின் 16 ஆவது மைல்கல்லுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவை எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு தொடருந்து திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement