• Jan 12 2025

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது - நடிகர் விஜய்

Tharmini / Jan 12th 2025, 9:25 am
image

தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் தலைமையில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. 

இந்நிலையில் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் , தேர்தலுக்கு முன்பு போலியான வாக்குறுதிகளை மக்களைக் கொடுத்து தேர்தலின் பின் மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தற்போது தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம்.

அதற்கு நீட் தேர்வு விவகாரம் ஒரு சான்று. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று ஆட்சியாளர்கள் மக்களை நம்ப வைத்தனர்.

ஆனால், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது மாநில அரசால் அதனை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?

பல பொய்களைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணம் இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது - நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் தலைமையில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் , தேர்தலுக்கு முன்பு போலியான வாக்குறுதிகளை மக்களைக் கொடுத்து தேர்தலின் பின் மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தற்போது தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம்.அதற்கு நீட் தேர்வு விவகாரம் ஒரு சான்று. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று ஆட்சியாளர்கள் மக்களை நம்ப வைத்தனர்.ஆனால், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது மாநில அரசால் அதனை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவாபல பொய்களைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணம் இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement