• Apr 05 2025

புதிய தீர்வை வரி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு - அரசாங்கம் நடவடிக்கை

Chithra / Apr 4th 2025, 9:38 am
image


அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக கலந்துரையாடல்களின் ஊடாக  நிவாரணம் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அமெரிக்கா வர்த்தக பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. பூகம்பத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கும் தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பின்னர் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் பேச்சுவார்த்தையின் ஊடாக  தீர்வை வரி வீதத்தை குறைத்துக் கொள்வது தொடர்பில் கோரிக்கை முன்வைக்க முயற்சித்துள்ளோம்.

அமெரிக்கா தனது தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தாவிடின் மாற்று வழிமுறைகள் பல உள்ளன.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் ஊடாக விசேட சலுகைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம். எமது தீர்வை வரி கொள்கையை இலகுப்படுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என்றார்.

புதிய தீர்வை வரி குறித்து அமெரிக்காவுடன் பேச்சு - அரசாங்கம் நடவடிக்கை அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக கலந்துரையாடல்களின் ஊடாக  நிவாரணம் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,அமெரிக்கா வர்த்தக பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. பூகம்பத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மியன்மாருக்கும் தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பின்னர் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் பேச்சுவார்த்தையின் ஊடாக  தீர்வை வரி வீதத்தை குறைத்துக் கொள்வது தொடர்பில் கோரிக்கை முன்வைக்க முயற்சித்துள்ளோம்.அமெரிக்கா தனது தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தாவிடின் மாற்று வழிமுறைகள் பல உள்ளன.ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் ஊடாக விசேட சலுகைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம். எமது தீர்வை வரி கொள்கையை இலகுப்படுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement