• Apr 05 2025

வீதி விபத்துக்களால் இந்த ஆண்டு 592 பேர் உயிரிழப்பு!

Chithra / Apr 4th 2025, 9:17 am
image

 

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 590 க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே போக்குவரத்துப் பிரிவின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 565 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில், வீதி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் வீதி விபத்துகளில் சராசரியாக தினமும் 7 முதல் 8 பேர் வரை இறக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

வீதி விபத்துக்களால் இந்த ஆண்டு 592 பேர் உயிரிழப்பு  2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 590 க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே போக்குவரத்துப் பிரிவின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளியிட்டார்.இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 565 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.எதிர்வரும தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில், வீதி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.நாடு முழுவதும் வீதி விபத்துகளில் சராசரியாக தினமும் 7 முதல் 8 பேர் வரை இறக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

Advertisement

Advertisement

Advertisement