காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே சிவகங்கை கப்பல் சேவையானது சீராக சேவையில் ஈடுபடுவதாகவும், எந்தவிதமான தடைகளும் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் அந்த கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் சேவையில் தடங்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரை தொடர்புகொண்டு வினவிய வேளை அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கப்பல் சேவையில் தடங்கல் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. பயணிகள் மிகவும் சௌகரியமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தை நீங்கள் பயணிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறுகிறது.
எனவே பயணிகள் www.Sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0212224647, 0117 642117 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ ஆசன பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
காங்கேசன்துறை நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவையில் தடங்கல் காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே சிவகங்கை கப்பல் சேவையானது சீராக சேவையில் ஈடுபடுவதாகவும், எந்தவிதமான தடைகளும் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் அந்த கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.குறித்த கப்பல் சேவையில் தடங்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரை தொடர்புகொண்டு வினவிய வேளை அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கப்பல் சேவையில் தடங்கல் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. பயணிகள் மிகவும் சௌகரியமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தை நீங்கள் பயணிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.செவ்வாய் கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறுகிறது.எனவே பயணிகள் www.Sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0212224647, 0117 642117 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ ஆசன பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.