பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களுடனான கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கூறிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதியினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும், அவ்வாறானால் அப்போதைய ஜனாதிபதி எதற்காக அதன் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை எனவும் முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பயணத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார் எனவும் முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் அந்தப் பணியை நிறைவேற்றுமா என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துமிந்த நாகமுவ இதனை கூறியுள்ளார்.
ரணிலின் குடியுரிமையை அரசு இரத்து செய்ய வேண்டும் - வலியுறுத்தும் துமிந்த நாகமுவ பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகங்களுடனான கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கூறிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.ஜனாதிபதியினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும், அவ்வாறானால் அப்போதைய ஜனாதிபதி எதற்காக அதன் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை எனவும் முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பயணத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார் எனவும் முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்த அரசாங்கம் அந்தப் பணியை நிறைவேற்றுமா என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துமிந்த நாகமுவ இதனை கூறியுள்ளார்.