• Jan 13 2026

புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பட்டத்திருவிழாவும் உணவுத்திருவிழாவும்!

shanuja / Jan 13th 2026, 11:29 am
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில் முதன்முறையாக  பாரம்பரியத்தின் பெருமையையும், ருசியின் மகிழ்வினையும் ஒன்றிணைக்கும் வகையில் உணவுத் திருவிழாவும் பட்டத் திருவிழாவும் மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கின்றது.


புதுக்குடியிருப்பில் பிரசித்திபெற்ற குயின்பார்க்கின் ஏற்பாட்டில் முதன் முறையாக உணவுத் திருவிழா மற்றும் பட்டத்திருவிழாவும் பிரமாண்டமான முறையில் குயின்பார்க்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18.01.2026 அன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 


பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் இந்த விழாவில், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் விஷேடமான பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன்

போட்டியில் பங்குபற்றி வெற்றிபெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட இருக்கின்றது.


நுழைவுக்கட்டணம் இலவசமாக வழங்கப்படும் இவ் பிரமாண்ட நிகழ்விற்கு பொது மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்வதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பட்டத்திருவிழாவும் உணவுத்திருவிழாவும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில் முதன்முறையாக  பாரம்பரியத்தின் பெருமையையும், ருசியின் மகிழ்வினையும் ஒன்றிணைக்கும் வகையில் உணவுத் திருவிழாவும் பட்டத் திருவிழாவும் மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கின்றது.புதுக்குடியிருப்பில் பிரசித்திபெற்ற குயின்பார்க்கின் ஏற்பாட்டில் முதன் முறையாக உணவுத் திருவிழா மற்றும் பட்டத்திருவிழாவும் பிரமாண்டமான முறையில் குயின்பார்க்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18.01.2026 அன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் இந்த விழாவில், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் விஷேடமான பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன்போட்டியில் பங்குபற்றி வெற்றிபெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட இருக்கின்றது.நுழைவுக்கட்டணம் இலவசமாக வழங்கப்படும் இவ் பிரமாண்ட நிகழ்விற்கு பொது மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்வதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement