• Oct 19 2024

கிரீஸ் புலம்பெயர்ந்தோர் படகு விபத்து - 9 எகிப்தியர்கள் நிதிமன்றத்தில் ஆஜர்!samugammedia

Tamil nila / Jun 20th 2023, 7:34 pm
image

Advertisement

கிரீஸ் – மத்தியதரைக் கடலில் மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 எகிப்தியர்கள் கிரீஸ் நீதிமன்றத்தில் இன்று (20.06) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த ஒன்பது பேர் மீதும்  ஒரு குற்றவியல் அமைப்பில் பங்கேற்பது, ஆணவக் கொலை மற்றும் கப்பல் விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கிரீஸின் மேற்கு கடற்கரையில் பாழடைந்த மீன்பிடி இழுவை படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த 500இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிப்பிழைத்தவர்கள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில், மனித கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதன்படி பாகிஸ்தானில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த  300 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கிரீஸ் புலம்பெயர்ந்தோர் படகு விபத்து - 9 எகிப்தியர்கள் நிதிமன்றத்தில் ஆஜர்samugammedia கிரீஸ் – மத்தியதரைக் கடலில் மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 எகிப்தியர்கள் கிரீஸ் நீதிமன்றத்தில் இன்று (20.06) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.குறித்த ஒன்பது பேர் மீதும்  ஒரு குற்றவியல் அமைப்பில் பங்கேற்பது, ஆணவக் கொலை மற்றும் கப்பல் விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.கடந்த வாரம் கிரீஸின் மேற்கு கடற்கரையில் பாழடைந்த மீன்பிடி இழுவை படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த 500இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தப்பிப்பிழைத்தவர்கள் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில், மனித கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதன்படி பாகிஸ்தானில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த விபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த  300 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement