• Feb 17 2026

தவறுதலாக இயங்கிய துப்பாக்கி; பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Dec 24th 2025, 8:15 pm
image

 

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இன்று(24) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


குறித்த உத்தியோகத்தர் கடமைக்குச் சென்ற பின்னர், தனது துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அது இயங்கியதாகக் கூறப்படுகிறது. 

 

துப்பாக்கிச் சூட்டில் அந்த உத்தியோகத்தரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் பலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தவறுதலாக இயங்கிய துப்பாக்கி; பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி  அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று(24) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த உத்தியோகத்தர் கடமைக்குச் சென்ற பின்னர், தனது துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அது இயங்கியதாகக் கூறப்படுகிறது.  துப்பாக்கிச் சூட்டில் அந்த உத்தியோகத்தரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் பலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement