நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் ஆயுததாரிகள் 13 விவசாயிகளைக் கொன்றுள்ளதாக அந்த நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நைஜர் மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கொலைகளுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.
துப்பாக்கிதாரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் வழங்கினார்கள், என்ற சந்தேகத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கலாமெனக் காவல்துறையினர் கருதுகின்றனர்.
வட-மத்திய நைஜீரியா நாடோடி மேய்ப்பர்களுக்கும் கிராமப்புற விவசாயிகளுக்கும் இடையே தண்ணீர் மற்றும் நிலத்தின் மீதான கட்டுப்பாட்டிற்கான சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ளது . இந்த ஆண்டு இதுவரை நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய இரு தரப்பினரும் இப்போது நாட்டுக்குள் கடத்தப்பட்ட துப்பாக்கிகளுடன் சண்டையிடுகிறார்கள். இருவரும் அரசாங்கத்தை அநீதி மற்றும் ஓரங்கட்டப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்
இப்பகுதி அடிக்கடி ஆள்கடத்தல்கள் நடக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. கடந்த வாரம், பென்யூ மாநிலத்தில் பதுங்கியிருந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் குறைந்தது 20 மாணவர்களைக் கடத்திச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
நைஜீரியாவில் 13 விவசாயிகளைக் கொன்ற ஆயுததாரிகள் நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் ஆயுததாரிகள் 13 விவசாயிகளைக் கொன்றுள்ளதாக அந்த நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.நைஜர் மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கொலைகளுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.துப்பாக்கிதாரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் வழங்கினார்கள், என்ற சந்தேகத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கலாமெனக் காவல்துறையினர் கருதுகின்றனர்.வட-மத்திய நைஜீரியா நாடோடி மேய்ப்பர்களுக்கும் கிராமப்புற விவசாயிகளுக்கும் இடையே தண்ணீர் மற்றும் நிலத்தின் மீதான கட்டுப்பாட்டிற்கான சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ளது . இந்த ஆண்டு இதுவரை நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.ஒரு காலத்தில் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய இரு தரப்பினரும் இப்போது நாட்டுக்குள் கடத்தப்பட்ட துப்பாக்கிகளுடன் சண்டையிடுகிறார்கள். இருவரும் அரசாங்கத்தை அநீதி மற்றும் ஓரங்கட்டப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்இப்பகுதி அடிக்கடி ஆள்கடத்தல்கள் நடக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. கடந்த வாரம், பென்யூ மாநிலத்தில் பதுங்கியிருந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் குறைந்தது 20 மாணவர்களைக் கடத்திச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது