• Sep 24 2026

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்

Chithra / Sep 24th 2026, 12:13 pm
image


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


அதன்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் அவர் ஒரு வருட காலத்திற்கு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த எம்.எஸ். அப்துல் வாசித் (M.S. Abthul Wazeeth) தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.அதன்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் அவர் ஒரு வருட காலத்திற்கு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த எம்.எஸ். அப்துல் வாசித் (M.S. Abthul Wazeeth) தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement