இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் இன்று திங்கட்கிழமை (26) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி ஆகிய உதவித்திட்டங்கள் மூலம் ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (26) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பீ.சரத் ,இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன் போது மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மன்னாரில் இந்திய-இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் இன்று திங்கட்கிழமை (26) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி ஆகிய உதவித்திட்டங்கள் மூலம் ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (26) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பீ.சரத் ,இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.இதன் போது மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.