• Sep 19 2024

மகளிருக்கு குட்நியூஸ்...! தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு...!

Sharmi / Apr 26th 2023, 2:29 pm
image

Advertisement

தங்கத்தின் விலையானது உலக சந்தை மற்றும் டொலரின் பெறுமதியனை வைத்தே தீர்மானிக்கப்படுவதாகவும் டொலரின் பெறுமதி குறைவடைந்தால் தங்கத்தின் விலையும் குறைவடையும் எனவும் அகில இலங்கை நகை விற்பனையாளர்கள்  சங்கத்தின் பொருளாளர் ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் தங்கத்தின் பெறுமதி என்னவோ அது போன்றே இலங்கையிலும் தாக்கத்தினை விற்பனை செய்ய வேண்டுமாயின் அதனை இறக்குமதி செய்ய மத்திய வங்கி அனுமதியளிக்க வேண்டும்.



இன்று தங்கத்தின் விலையானது உலக சந்தை மற்றும் டொலரின் பெறுமதியனை வைத்தே  நிர்ணயிக்கப்படுவதுடன்  ஒவ்வொரு நாட்டினதும் வரிக்கேற்ப தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையை பொறுத்தமட்டில் வரிகளிற்கு உட்பட்டு தங்கத்தினை இறக்குமதி செய்தால் 28 வீதம் போடப்படும். ஆனால் தங்க இறக்குமதியானது அந்நிய செலாவணி காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.



அதனாலே உள்நாட்டில் காணப்படும் தங்கத்திற்கு போட்டி நிலவுவதால் அன்றாடம் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகின்றது.

உலக சந்தைக்கும் எமக்கும் 10000 ரூபாய் வித்தியாசமே காணப்படுகிறது. அதனை மாற்ற வேண்டுமாயின் அரசாங்கம் நகை வர்த்தகர்களிற்கு தங்க இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும். அல்லது அரசாங்கம் வழங்க வேண்டும்.

தங்கத்தின் விலையில் அதிகரிப்பு நடந்தாலும், டொலரின் பெறுமதி குறைந்துள்ளதாலும் இலங்கையின் நாணய பெறுமதி கூடியுள்ளதாலும் தற்பொழுது தங்கத்தின் விலை இவ்வாறு உள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்வதாயின் டொலரின் பெறுமதி குறைவாக உள்ள பொழுது முதலீடு செய்வது லாபகரமானது.

ஆகவே உலக சந்தையுடன்  டொலரின் பெறுமதியுமே தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்கின்றது எனவும் கூறியுள்ளார்.

மகளிருக்கு குட்நியூஸ். தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு. தங்கத்தின் விலையானது உலக சந்தை மற்றும் டொலரின் பெறுமதியனை வைத்தே தீர்மானிக்கப்படுவதாகவும் டொலரின் பெறுமதி குறைவடைந்தால் தங்கத்தின் விலையும் குறைவடையும் எனவும் அகில இலங்கை நகை விற்பனையாளர்கள்  சங்கத்தின் பொருளாளர் ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், உலக சந்தையில் தங்கத்தின் பெறுமதி என்னவோ அது போன்றே இலங்கையிலும் தாக்கத்தினை விற்பனை செய்ய வேண்டுமாயின் அதனை இறக்குமதி செய்ய மத்திய வங்கி அனுமதியளிக்க வேண்டும். இன்று தங்கத்தின் விலையானது உலக சந்தை மற்றும் டொலரின் பெறுமதியனை வைத்தே  நிர்ணயிக்கப்படுவதுடன்  ஒவ்வொரு நாட்டினதும் வரிக்கேற்ப தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது. இலங்கையை பொறுத்தமட்டில் வரிகளிற்கு உட்பட்டு தங்கத்தினை இறக்குமதி செய்தால் 28 வீதம் போடப்படும். ஆனால் தங்க இறக்குமதியானது அந்நிய செலாவணி காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதனாலே உள்நாட்டில் காணப்படும் தங்கத்திற்கு போட்டி நிலவுவதால் அன்றாடம் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகின்றது. உலக சந்தைக்கும் எமக்கும் 10000 ரூபாய் வித்தியாசமே காணப்படுகிறது. அதனை மாற்ற வேண்டுமாயின் அரசாங்கம் நகை வர்த்தகர்களிற்கு தங்க இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும். அல்லது அரசாங்கம் வழங்க வேண்டும். தங்கத்தின் விலையில் அதிகரிப்பு நடந்தாலும், டொலரின் பெறுமதி குறைந்துள்ளதாலும் இலங்கையின் நாணய பெறுமதி கூடியுள்ளதாலும் தற்பொழுது தங்கத்தின் விலை இவ்வாறு உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதாயின் டொலரின் பெறுமதி குறைவாக உள்ள பொழுது முதலீடு செய்வது லாபகரமானது. ஆகவே உலக சந்தையுடன்  டொலரின் பெறுமதியுமே தங்கத்தின் விலையினை நிர்ணயம் செய்கின்றது எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement