• Sep 20 2024

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..! தயாராகும் வீடுகள்!

Chithra / Aug 13th 2023, 11:35 am
image

Advertisement

 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது. 

03 முறைகள் மூலம் இந்த வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறை சொந்த நிலத்தில் வீடு கட்டுவதாகும்.

இரண்டாவது, நகரத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் காணியற்றுவர்களுக்கு வீடுகள் கட்டுவதாகவும். மூன்றாவது முறை அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதென தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. 

இது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் பொறுப்பு அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளம் ஏற்கனவே வீட்டுத் தேவையிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

அத்துடன், கிட்டத்தட்ட 1000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல், மாவட்ட மட்டத்திலும் வீடுகள் தேவைப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு. தயாராகும் வீடுகள்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது. 03 முறைகள் மூலம் இந்த வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறை சொந்த நிலத்தில் வீடு கட்டுவதாகும்.இரண்டாவது, நகரத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் காணியற்றுவர்களுக்கு வீடுகள் கட்டுவதாகவும். மூன்றாவது முறை அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதென தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பான கூட்டு அமைச்சரவை பத்திரம் பொறுப்பு அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளம் ஏற்கனவே வீட்டுத் தேவையிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அத்துடன், கிட்டத்தட்ட 1000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மாவட்ட மட்டத்திலும் வீடுகள் தேவைப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement