• Apr 28 2025

யாழ். நோக்கி சென்ற பயணிகள் பேருந்துகள் மீது தாக்குதல்

Chithra / Oct 8th 2024, 1:37 pm
image

  

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதி காயமடைந்துள்ளார்.

வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து மீதும், பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது கிளிநொச்சியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பதுளை - யாழ்ப்பாணம் பேருந்து, பரந்தன் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

எனினும் இந்தத் தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நோக்கி சென்ற பயணிகள் பேருந்துகள் மீது தாக்குதல்   கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதி காயமடைந்துள்ளார்.வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.கொழும்பில் இருந்து யாழ் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து மீதும், பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது கிளிநொச்சியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பதுளை - யாழ்ப்பாணம் பேருந்து, பரந்தன் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.எனினும் இந்தத் தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now