அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகணத்தில் வவுனியா, மன்னார், முல்லைதீவு, கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில்
இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று ஏழாவது நாளாக யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இக் கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், யாழ் பல்கலைக்கழக கலைத்துறை பீடாதிபதி எஸ்.ரகுராம்,
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன், யாழ் மாநகர சபையின் முன்னாள் மேஜர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ். மடத்தடியில் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.வடமாகணத்தில் வவுனியா, மன்னார், முல்லைதீவு, கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று ஏழாவது நாளாக யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இக் கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், யாழ் பல்கலைக்கழக கலைத்துறை பீடாதிபதி எஸ்.ரகுராம், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்.ஐங்கரநேசன், யாழ் மாநகர சபையின் முன்னாள் மேஜர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.