• Oct 30 2024

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றாலும் பதவி பறிபோகும் கூடும் - கஜதீபன் தெரிவிப்பு!

Tamil nila / Oct 19th 2024, 8:03 pm
image

Advertisement

இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றால் பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியில் சிறீதரன், மாவை சேனாதிராஜா, ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளுக்காக கட்சியால் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதை எங்களால் உறுதி செய்ய முடியும்.

நீங்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கை முடிவுகளை மீறி இருக்கின்றீர்கள். அப்படி செய்ய முடியாது என்பது தொடர்பாக அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் விளக்கம் கோரியிருக்கிறார். இதனால் தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற பிரச்சினைகள் உலகறிந்தது.

இதில் நீதிமன்ற வழக்குகள் பிரசித்தமானது. தொடர்ச்சியாக வழக்குகள் போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன . இதனால் தேர்தலுக்குப் பின்னர்  நடக்கக்கூடிய சம்பவங்கள் மிக வேடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

இந்த ஒழுக்காற்று விசாரணையின் ஊடாக அநேகமாக பலர் ஓரங்கட்டப் பட்டிருக்கின்ற நிலையில் சிறீதரன் மாத்திரம் உள்வாங்கப்பட்டிருக்கிறார். சில வேளைகளில் சிறீதரன் தங்களுடைய வேட்பாளர்கள் அத்தனை பேரையும் விட வாக்குகளை கவரக் கூடியவராக இருப்பார் என அவர்கள் நினைத்திருக்கக்கூடும். அதன் அடிப்படையில் அவர் வேட்பாளராக நிறுத் தப்பட்டு இருக்கின்றார் என நாங்கள் நம்புகின்றோம்.

எனவே சிறீதரன் வெற்றிபெற்றாலும் தேர்தலுக்குப் பிறகு அநேகமாக நான் நம்புகின்ற ஒரு விடயம் ஒழுக்காற்று விசாரணை மூலமாக அதைக் கிடைக்காமல் செய்யக்கூடும் என்பதுதான் என்றார்.

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றாலும் பதவி பறிபோகும் கூடும் - கஜதீபன் தெரிவிப்பு இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றால் பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்தார் .யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியில் சிறீதரன், மாவை சேனாதிராஜா, ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளுக்காக கட்சியால் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதை எங்களால் உறுதி செய்ய முடியும்.நீங்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கை முடிவுகளை மீறி இருக்கின்றீர்கள். அப்படி செய்ய முடியாது என்பது தொடர்பாக அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் விளக்கம் கோரியிருக்கிறார். இதனால் தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற பிரச்சினைகள் உலகறிந்தது.இதில் நீதிமன்ற வழக்குகள் பிரசித்தமானது. தொடர்ச்சியாக வழக்குகள் போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன . இதனால் தேர்தலுக்குப் பின்னர்  நடக்கக்கூடிய சம்பவங்கள் மிக வேடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.இந்த ஒழுக்காற்று விசாரணையின் ஊடாக அநேகமாக பலர் ஓரங்கட்டப் பட்டிருக்கின்ற நிலையில் சிறீதரன் மாத்திரம் உள்வாங்கப்பட்டிருக்கிறார். சில வேளைகளில் சிறீதரன் தங்களுடைய வேட்பாளர்கள் அத்தனை பேரையும் விட வாக்குகளை கவரக் கூடியவராக இருப்பார் என அவர்கள் நினைத்திருக்கக்கூடும். அதன் அடிப்படையில் அவர் வேட்பாளராக நிறுத் தப்பட்டு இருக்கின்றார் என நாங்கள் நம்புகின்றோம்.எனவே சிறீதரன் வெற்றிபெற்றாலும் தேர்தலுக்குப் பிறகு அநேகமாக நான் நம்புகின்ற ஒரு விடயம் ஒழுக்காற்று விசாரணை மூலமாக அதைக் கிடைக்காமல் செய்யக்கூடும் என்பதுதான் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement