• Dec 09 2024

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்..!

Sharmi / Sep 2nd 2024, 1:11 pm
image

மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று(01)  மாலை இடம்பெற்றது.

மட்டு கல்முனை பிரதான சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து ஓந்தாச்சிமடம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துமே ஓந்தாச்சிமடம் பகுதியில் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. 

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்ததுடன், முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம். மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த விபத்து நேற்று(01)  மாலை இடம்பெற்றது.மட்டு கல்முனை பிரதான சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து ஓந்தாச்சிமடம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துமே ஓந்தாச்சிமடம் பகுதியில் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்ததுடன், முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement