• Sep 20 2024

யாழ். புங்குடுதீவில் மூவரின் மோசமான செயல்! சிவில் சமூக உறுப்பினர்களால் மடக்கிப்பிடிப்பு samugammedia

Chithra / Jul 23rd 2023, 6:50 am
image

Advertisement

புங்குடுதீவு - இறுப்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பசுக்கன்று வெட்டப்பட்ட நிலையில் தீவக சிவில் சமூக உறுப்பினர்களால் இன்று மூவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த மூவரும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் தங்கியிருந்து கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேற்படி நபர்களை வழமைபோன்று வெறும் 500 ரூபாய் அபராத தொகையுடன் உடனடியாக விடுவிக்காது, அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டுமென்றும் தீவக சிவில் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ். புங்குடுதீவில் மூவரின் மோசமான செயல் சிவில் சமூக உறுப்பினர்களால் மடக்கிப்பிடிப்பு samugammedia புங்குடுதீவு - இறுப்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பசுக்கன்று வெட்டப்பட்ட நிலையில் தீவக சிவில் சமூக உறுப்பினர்களால் இன்று மூவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து குறித்த மூவரும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் இருவர் கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் தங்கியிருந்து கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.மேற்படி நபர்களை வழமைபோன்று வெறும் 500 ரூபாய் அபராத தொகையுடன் உடனடியாக விடுவிக்காது, அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டுமென்றும் தீவக சிவில் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement