10 ஆவது நாடாளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பிளவர் வீதியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு புதிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகக் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன பெயரிடப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் முக்கிய பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழிவு 10 ஆவது நாடாளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - பிளவர் வீதியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு புதிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகக் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன பெயரிடப்பட்டுள்ளார்.