மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்பு புத்தளத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வடமாகாணத்தில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் யாழ்ப்பாணம் இந்தியாவோடு இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்தார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஜனாதிபதி அனுர யாழ் வருகையும் அதன் போது அவர் ஆற்றிய உரையில் இந்திய மீனவர்களுடனான பிரச்சினை பற்றி மாத்திரம் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.
இது எமக்கு கவலையளிக்கிறது, தேர்தலுக்கு முன் உங்களது NPP கட்சி மீனவர்களது பிரச்சினை தொடர்பில் அதிகமாக பேசியது,
ஆனால் யாழில் வந்து இந்திய மீனவர்களது பிரச்சினை மாத்திரமே உள்ளது போல பேசிவிட்டுச் சென்றுள்ளீர்கள்.
இங்குள்ள மீன்பிடியில் பல சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்கள் நடைமுறையில் உள்ளது. அதனை தீர்ப்பதாக தேர்தலின் முன் பேசினீர்கள். ஜனாதிபதியாகிய பின் உங்களது நிலைப்பாடு வேறாகவுள்ளது.
தடைசெய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைந்து போகிறது. இது பற்றி பேச மறுப்பது ஏன்? இந்திய மீனவர்களின் பிரிச்சினை மட்டுமே இருப்பதாக காட்டி சீனாவிடமிருந்து உதவிகளைப் பெறுவதே உங்கள் நோக்கமாகவுள்ளது போல் நாம் சந்தேகக்கிறோம். என தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்தியாவோடு இணைக்கப்பட்டுவிட்டதா யாழ். கடற்றொழிலாளர்கள் சீற்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்பு புத்தளத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வடமாகாணத்தில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் யாழ்ப்பாணம் இந்தியாவோடு இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்தார்.யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்:- ஜனாதிபதி அனுர யாழ் வருகையும் அதன் போது அவர் ஆற்றிய உரையில் இந்திய மீனவர்களுடனான பிரச்சினை பற்றி மாத்திரம் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.இது எமக்கு கவலையளிக்கிறது, தேர்தலுக்கு முன் உங்களது NPP கட்சி மீனவர்களது பிரச்சினை தொடர்பில் அதிகமாக பேசியது, ஆனால் யாழில் வந்து இந்திய மீனவர்களது பிரச்சினை மாத்திரமே உள்ளது போல பேசிவிட்டுச் சென்றுள்ளீர்கள். இங்குள்ள மீன்பிடியில் பல சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்கள் நடைமுறையில் உள்ளது. அதனை தீர்ப்பதாக தேர்தலின் முன் பேசினீர்கள். ஜனாதிபதியாகிய பின் உங்களது நிலைப்பாடு வேறாகவுள்ளது. தடைசெய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைந்து போகிறது. இது பற்றி பேச மறுப்பது ஏன் இந்திய மீனவர்களின் பிரிச்சினை மட்டுமே இருப்பதாக காட்டி சீனாவிடமிருந்து உதவிகளைப் பெறுவதே உங்கள் நோக்கமாகவுள்ளது போல் நாம் சந்தேகக்கிறோம். என தெரிவித்தார்.