• Apr 16 2026

அதிக இலாபத்தை ஈட்டிய ஹட்டன் பேருந்து நிலையம்!

shanu / Oct 21st 2025, 4:20 pm
image

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஹட்டன் பேருந்துசாலையில், ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா  இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பில்  கருத்துரைத்த ஹட்டன் பேருந்துசாலையின் உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்தார். 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் அதிகளவானோர் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற நிலையில் குறித்த இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. 

 

பண்டிகையின் போது ஹட்டன் பேருந்துசாலைக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 90 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அதிக அளவில் பேருந்துகள்  இருந்தால் மேலும் பல லட்சம் ரூபா  வருமானம் கிடைத்திருக்கும் எனவும் எமது ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகள் நடத்துனர்கள் மற்றும் புதிய பேருந்துகள் வழங்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதிக இலாபத்தை ஈட்டிய ஹட்டன் பேருந்து நிலையம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஹட்டன் பேருந்துசாலையில், ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா  இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில்  கருத்துரைத்த ஹட்டன் பேருந்துசாலையின் உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் அதிகளவானோர் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற நிலையில் குறித்த இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.  பண்டிகையின் போது ஹட்டன் பேருந்துசாலைக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 90 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அதிக அளவில் பேருந்துகள்  இருந்தால் மேலும் பல லட்சம் ரூபா  வருமானம் கிடைத்திருக்கும் எனவும் எமது ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகள் நடத்துனர்கள் மற்றும் புதிய பேருந்துகள் வழங்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement