ஹட்டன் அரச பேருந்து நிலையம் இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்தார்.
இம்முறை தீபத் திருநாளினைக் கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர். இதனால் விசேட பஸ் சேவைகள் ஹட்டனில் இருந்து மலையக நகரங்களுக்கும், தலை நகரத்திற்கும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இந் நிலையில் கடந்த 27 ஆம் திகதி தொடக்க 31 ஆம் திகதிவரை குறிப்பிட்ட வருமானத்தினை ஈட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் கடந்த கால தீபாவளியினை ஒப்பிடும் போது இம் முறை வருமானம் குறைந்துள்ளதாகவும் அதற்கு கொழும்பிலிருந்து ஏனைய காலங்களில் வந்த அளவுக்கு இம்முறை வருகை தரவில்லை என்றும் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டமையும் காரணம் என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதன் அடிப்படையில் கடந்த 27 ம் திகதி 26,79,384 ரூபாவும் 28 ம் திகதி 29,29,280, 29 ம் திகதி 33.77.102, 30 ம் திகதி 34,71211 31 ம் திகதி 39.79,812 வருமானமாக பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் அரச பேருந்து நிலையம் தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளது - முகாமையாளர் ஹட்டன் அரச பேருந்து நிலையம் இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்தார்.இம்முறை தீபத் திருநாளினைக் கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர். இதனால் விசேட பஸ் சேவைகள் ஹட்டனில் இருந்து மலையக நகரங்களுக்கும், தலை நகரத்திற்கும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.இந் நிலையில் கடந்த 27 ஆம் திகதி தொடக்க 31 ஆம் திகதிவரை குறிப்பிட்ட வருமானத்தினை ஈட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.எனினும் கடந்த கால தீபாவளியினை ஒப்பிடும் போது இம் முறை வருமானம் குறைந்துள்ளதாகவும் அதற்கு கொழும்பிலிருந்து ஏனைய காலங்களில் வந்த அளவுக்கு இம்முறை வருகை தரவில்லை என்றும் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டமையும் காரணம் என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.இதன் அடிப்படையில் கடந்த 27 ம் திகதி 26,79,384 ரூபாவும் 28 ம் திகதி 29,29,280, 29 ம் திகதி 33.77.102, 30 ம் திகதி 34,71211 31 ம் திகதி 39.79,812 வருமானமாக பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.