• Dec 12 2024

யாழில் உழவு இயந்திரத்தின் பின்னால் மோதிய ஹயஸ் வாகனம்..! கட்டடத்தொழிலாளி உயிரிழப்பு..! நுணாவில் துயரம்..!

Sharmi / May 1st 2024, 1:59 pm
image

யாழ் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் பகுதியில் இன்று காலை 5மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த உழவு இயந்திரமும், கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் உழவு இயந்திரத்தில் பயணித்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ம.சதீஸ்குமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உழவு இயந்திர சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவருமாக மொத்தம் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


யாழில் உழவு இயந்திரத்தின் பின்னால் மோதிய ஹயஸ் வாகனம். கட்டடத்தொழிலாளி உயிரிழப்பு. நுணாவில் துயரம். யாழ் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் பகுதியில் இன்று காலை 5மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த உழவு இயந்திரமும், கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் உழவு இயந்திரத்தில் பயணித்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ம.சதீஸ்குமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் உழவு இயந்திர சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவருமாக மொத்தம் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement