• Apr 02 2025

யாழில் விஷ ஜந்து ஒன்றால் தீண்டப்பட்ட குடும்பத்தலைவர் உயிரிழப்பு!

Tamil nila / Aug 29th 2024, 8:47 pm
image

விஷ ஜந்து ஒன்றால் தீண்டப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கைதடி வடக்கு - கைதடியைச் சேர்ந்த இராசையா தர்மசேனன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காணியொன்றைத் துப்புரவு செய்தபோது விஷ ஜந்து ஒன்று அவரைத் தீண்டியதாகச் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


யாழில் விஷ ஜந்து ஒன்றால் தீண்டப்பட்ட குடும்பத்தலைவர் உயிரிழப்பு விஷ ஜந்து ஒன்றால் தீண்டப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.கைதடி வடக்கு - கைதடியைச் சேர்ந்த இராசையா தர்மசேனன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காணியொன்றைத் துப்புரவு செய்தபோது விஷ ஜந்து ஒன்று அவரைத் தீண்டியதாகச் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement