• Apr 18 2026

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் விபத்து .! மருத்துவமனையில் மூவர் அனுமதி

Aathira / Apr 18th 2026, 5:36 pm
image

நுவரெலியா–ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை, பெயாவெல் பகுதியில் இன்று (18) மதியம் 12.15 மணியளவில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பண்டாரவளையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற காரும், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். 

அவர்கள் உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, காரில் பயணித்தவர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிந்துலை பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் விபத்து . மருத்துவமனையில் மூவர் அனுமதி நுவரெலியா–ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை, பெயாவெல் பகுதியில் இன்று (18) மதியம் 12.15 மணியளவில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.பண்டாரவளையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற காரும், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். அவர்கள் உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, காரில் பயணித்தவர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லிந்துலை பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement