• Nov 25 2024

வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பில் குதித்த சுகாதார தொழிற்சங்கங்கள்..!

Chithra / May 13th 2024, 8:16 am
image


மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (13) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து குறித்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளன. 

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது. 

இந் நிலையில் இன்று ஆரம்பமாகவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் பல்வேறு மாகாணங்களை உள்ளடக்கியதாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பில் குதித்த சுகாதார தொழிற்சங்கங்கள். மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (13) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து குறித்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது. இந் நிலையில் இன்று ஆரம்பமாகவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் பல்வேறு மாகாணங்களை உள்ளடக்கியதாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement