• Sep 20 2024

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், சுகாதார பணியாளர்கள் போராட்டம்! SamugamMedia

Tamil nila / Feb 23rd 2023, 4:29 pm
image

Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு போதனா வைபத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பு மற்றும் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன.



சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு குறைப்பு உட்பட 09கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.



சுகாதார ஊழியர்கள் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள்,ஆரம்ப சுகாதார பிரிவு சேவைகள்,வெளிநோயாளர் பிரிவு என்பன பாதிக்கப்பட்டதுடன் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.



அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


மருந்துகள்,உபகரணங்களின் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திசெய்,அதிகரித்த வரியை நிறுத்து,மேலதிக கொடுப்பனவினை சுரண்டாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.


தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டத்தினை அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி பாரியளவில் முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், சுகாதார பணியாளர்கள் போராட்டம் SamugamMedia பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு போதனா வைபத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பு மற்றும் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன.சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு குறைப்பு உட்பட 09கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.சுகாதார ஊழியர்கள் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள்,ஆரம்ப சுகாதார பிரிவு சேவைகள்,வெளிநோயாளர் பிரிவு என்பன பாதிக்கப்பட்டதுடன் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.மருந்துகள்,உபகரணங்களின் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திசெய்,அதிகரித்த வரியை நிறுத்து,மேலதிக கொடுப்பனவினை சுரண்டாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டத்தினை அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி பாரியளவில் முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement