• Apr 15 2026

நாட்டில் இன்று வெப்பமும் மழையும் – வானிலை அறிவிப்பு

Aathira / Apr 11th 2026, 7:14 am
image

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பநிலை மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, சூரியன் வடக்கு நோக்கி நகரும் நிலையினால், இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பொம்பரிப்பு, அனுராதபுரம், மிகிந்தலை, ஹலன்பிந்துனுவெவ, அக்போபுர மற்றும் சேருநுவர பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, வதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேவேளை, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில், மேலும் கண்டி, நுவரெலியா, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை நேரங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். 

கடலில் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் நிலையில், மன்னார் முதல் புத்தளம் வழியாக கொழும்பு மற்றும் பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீட்டரை மீறக்கூடும். 

இதனால் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று வெப்பமும் மழையும் – வானிலை அறிவிப்பு நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பநிலை மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, சூரியன் வடக்கு நோக்கி நகரும் நிலையினால், இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பொம்பரிப்பு, அனுராதபுரம், மிகிந்தலை, ஹலன்பிந்துனுவெவ, அக்போபுர மற்றும் சேருநுவர பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கண்டி, நுவரெலியா, மாத்தளை, வதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில், மேலும் கண்டி, நுவரெலியா, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை நேரங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். கடலில் மணிக்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் நிலையில், மன்னார் முதல் புத்தளம் வழியாக கொழும்பு மற்றும் பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீட்டரை மீறக்கூடும். இதனால் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement