நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனி தெரு, மருதானை, புரஹல, ராஜகிரிய, பத்தரமுல்லை, நுகேகொடை, கிருலப்பனை, பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து நெரிசலுடன் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வாகனம் ஓட்டும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்
இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அத்தனுகலு ஓயா, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த நீர்நிலைகளை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கன மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் - கடும் வாகன நெரிசல் சாரதிகளுக்கு அவசர அறிவுறுத்தல் நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனி தெரு, மருதானை, புரஹல, ராஜகிரிய, பத்தரமுல்லை, நுகேகொடை, கிருலப்பனை, பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து நெரிசலுடன் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து வாகனம் ஓட்டும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி அத்தனுகலு ஓயா, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்காரணமாக குறித்த நீர்நிலைகளை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.