• May 17 2024

திருமலையில் தொடரும் கனமழை...! கந்தளாய் குளத்தின் 10வான் கதவுகள் திறப்பு...!samugammedia

Sharmi / Jan 9th 2024, 2:32 pm
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சின்தக சுரவீர தெரிவித்தார்.


கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதினால் பத்து வான் கதவுகளையும் இன்று (09) ஒரு அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் வெருகல் பிரதேசத்தில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு ட்பட்ட மாஞ்சோலைச்சேனை, மாஞ்சோலை மற்றும் அண்ணன் நகர் போன்ற  பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி தெரிவித்தார்.


அத்துடன் மொரவெவ -பேரமடுவ குளங்கள் நிரம்பி வழிவதாகவும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட நீர் பாசன திணைக்கள பணிப்பாளர் கே. சுப்பிரமணியம் தெரிவித்தார்.



திருமலையில் தொடரும் கனமழை. கந்தளாய் குளத்தின் 10வான் கதவுகள் திறப்பு.samugammedia திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சின்தக சுரவீர தெரிவித்தார்.கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதினால் பத்து வான் கதவுகளையும் இன்று (09) ஒரு அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் வெருகல் பிரதேசத்தில் சில வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு ட்பட்ட மாஞ்சோலைச்சேனை, மாஞ்சோலை மற்றும் அண்ணன் நகர் போன்ற  பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி தெரிவித்தார்.அத்துடன் மொரவெவ -பேரமடுவ குளங்கள் நிரம்பி வழிவதாகவும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட நீர் பாசன திணைக்கள பணிப்பாளர் கே. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement