• Mar 13 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை; கடற்பகுதிகளில் அதிகரிக்கும் காற்றின் வேகம்

Chithra / Dec 24th 2025, 9:14 am
image


கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். 


தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.


மத்திய மற்றும் சப்ரகமுவ  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை,

களுத்துறை மற்றும் வதுளை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.


திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு  ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.


களுத்துறை தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.


கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை; கடற்பகுதிகளில் அதிகரிக்கும் காற்றின் வேகம் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.மத்திய மற்றும் சப்ரகமுவ  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை,களுத்துறை மற்றும் வதுளை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு  ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.களுத்துறை தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement