• Nov 23 2024

புத்தளத்தில் கடும் மழை; 21,554 பேர் பாதிப்பு!

Tamil nila / Nov 9th 2024, 6:40 pm
image

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6201 குடும்பங்களைச் சேர்ந்த 21554 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில் புத்தளம், முந்தல், கல்பிட்டி, ஆனமடு, நாத்தாண்டி, மாதம்பை, மகாவெவ, ஆராச்சிக்கட்டு, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய 10 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 59 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 6201 குடும்பங்களைச் சேர்ந்த 21554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளில் 4016 குடும்பங்களைச் சேர்ந்த 13351 பேரும் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 1501 குடும்பங்களைச் சேர்ந்த 5846 பேரும் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 655 பேரும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 04 பேரும் நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 02 கிராம சேவகர் பிரிவுகளில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  08 கிராம சேவகர் பிரிவில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேரும் மகாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 230 பேரும் ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேரும் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 06 கிராம சேவகர் பிரிவுகளில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 868 பேரும் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  01 கிராம சேவகர் பிரிவுகளில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 322 பேர்கள 03 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


புத்தளத்தில் கடும் மழை; 21,554 பேர் பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6201 குடும்பங்களைச் சேர்ந்த 21554 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் புத்தளம், முந்தல், கல்பிட்டி, ஆனமடு, நாத்தாண்டி, மாதம்பை, மகாவெவ, ஆராச்சிக்கட்டு, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய 10 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 59 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 6201 குடும்பங்களைச் சேர்ந்த 21554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளில் 4016 குடும்பங்களைச் சேர்ந்த 13351 பேரும் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 1501 குடும்பங்களைச் சேர்ந்த 5846 பேரும் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 03 கிராம சேவகர் பிரிவுகளில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 655 பேரும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 04 பேரும் நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 02 கிராம சேவகர் பிரிவுகளில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  08 கிராம சேவகர் பிரிவில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேரும் மகாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 230 பேரும் ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 01 கிராம சேவகர் பிரிவில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேரும் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 06 கிராம சேவகர் பிரிவுகளில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 868 பேரும் மற்றும் வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  01 கிராம சேவகர் பிரிவுகளில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 322 பேர்கள 03 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement