கிழக்கு மாகாண மக்களை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செய்வதுடன்,
இப்பொதுத் தேர்தலானது அரசியில் தீர்வை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் .
தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்க வைக்கும் வகையிலான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலாகவும் உள்ளது என்பதனை வலியுறுத்திய வகையிலான செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தன்னாமுனை மியானி மண்டபத்தில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் வகையிலும் அது தொடர்பில் உரையாடும் வகையிலுமான இந்த செயலமர்வு நடைபெற்றது.
இச்செயலமர்வும் உரையாடலும் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர், திட்ட முகமையாளர், திட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் சனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய சனாதிபதி பதிவி ஏற்று இருக்கின்ற சூழ்நிலையில் சனாதிபதி அவர்களால் கடந்த புரட்டாதி மாதம் வர்தமானி ஊடாக பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இவ் அறிவித்தல் வர்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இலங்கையிலுள்ள பிரதான தேசிய கட்சிகள், தமிழ் முஸ்லிம் மாற்றுக் கட்சிகள், காலங்காலமாக சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்ட வகையில் பிரித்தாளப்பட்டு இத்தேர்தல் களத்தினில் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டி போடுகின்றன.
குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தலா ஒவ்வொரு மாவட்டங்களிலும் 15 தொடக்கம் 25 வரையான சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் சிதறக் கூடிய சந்தர்பங்கள் அதிகமாக இருப்பதுடன், வடக்கு கிழக்கு பிரதேச மக்களில் குறிப்பிட்டளவு வாக்காளர்கள் தேர்தலை பகிஸ்கரிக்கக் கூடிய விரக்தியான நிலையிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இலங்கை அரச இனவாத அடக்கு முறையில் இருந்து விடுபட்டு நிம்மதியான, இயல்பான எமது அடையாளங்களுடன் வாழ்வதற்காக நிலையான அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை தேசத்திலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்கக் கூடிய தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் செல்லும் பிரதிநிதிகள் அதிகமாக குறையக் கூடிய ஆபத்தான சூழ் நிலை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் காணப்படுகின்றது.
அந்த வகையில் இந்நிலையை கள ஆய்வின் ஊடாக கண்டுகொண்ட எமது அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பானது இத்தேர்தலில் குறிப்பாக எமது வேலைக் களப்பிரதேசமான இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அனைத்து மக்களையும் வாக்களிக்க செய்வதுடன், இப்பொதுத் தேர்தலானது எமது அரசியில் தீர்வை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் எமது இருப்பை தக்கவைக்கும் வகையிலான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலாகவும் இருக்கின்றது என்பதனை வலியுறுத்திய வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் செயலமர்வு மற்றும் உரையாடல் எனும் நிகழ்வு ஏற்பாடுள்ளதாக இங்கு கலந்துகொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் செயலமர்வு கிழக்கு மாகாண மக்களை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செய்வதுடன், இப்பொதுத் தேர்தலானது அரசியில் தீர்வை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் . தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்க வைக்கும் வகையிலான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலாகவும் உள்ளது என்பதனை வலியுறுத்திய வகையிலான செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு தன்னாமுனை மியானி மண்டபத்தில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு நடைபெற்றது.கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் வகையிலும் அது தொடர்பில் உரையாடும் வகையிலுமான இந்த செயலமர்வு நடைபெற்றது.இச்செயலமர்வும் உரையாடலும் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர், திட்ட முகமையாளர், திட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இலங்கையில் சனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய சனாதிபதி பதிவி ஏற்று இருக்கின்ற சூழ்நிலையில் சனாதிபதி அவர்களால் கடந்த புரட்டாதி மாதம் வர்தமானி ஊடாக பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இவ் அறிவித்தல் வர்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இலங்கையிலுள்ள பிரதான தேசிய கட்சிகள், தமிழ் முஸ்லிம் மாற்றுக் கட்சிகள், காலங்காலமாக சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்ட வகையில் பிரித்தாளப்பட்டு இத்தேர்தல் களத்தினில் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டி போடுகின்றன.குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தலா ஒவ்வொரு மாவட்டங்களிலும் 15 தொடக்கம் 25 வரையான சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் சிதறக் கூடிய சந்தர்பங்கள் அதிகமாக இருப்பதுடன், வடக்கு கிழக்கு பிரதேச மக்களில் குறிப்பிட்டளவு வாக்காளர்கள் தேர்தலை பகிஸ்கரிக்கக் கூடிய விரக்தியான நிலையிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இலங்கை அரச இனவாத அடக்கு முறையில் இருந்து விடுபட்டு நிம்மதியான, இயல்பான எமது அடையாளங்களுடன் வாழ்வதற்காக நிலையான அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை தேசத்திலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்கக் கூடிய தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் செல்லும் பிரதிநிதிகள் அதிகமாக குறையக் கூடிய ஆபத்தான சூழ் நிலை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் காணப்படுகின்றது.அந்த வகையில் இந்நிலையை கள ஆய்வின் ஊடாக கண்டுகொண்ட எமது அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பானது இத்தேர்தலில் குறிப்பாக எமது வேலைக் களப்பிரதேசமான இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அனைத்து மக்களையும் வாக்களிக்க செய்வதுடன், இப்பொதுத் தேர்தலானது எமது அரசியில் தீர்வை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் எமது இருப்பை தக்கவைக்கும் வகையிலான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தலாகவும் இருக்கின்றது என்பதனை வலியுறுத்திய வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் செயலமர்வு மற்றும் உரையாடல் எனும் நிகழ்வு ஏற்பாடுள்ளதாக இங்கு கலந்துகொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.