யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை மணியகாரன் சந்தி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பருத்தித் துறை சாலையிலிருந்து தும்பளை மணியகாரன் சந்தி ஊடக பொற்பதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தவேளை தும்பளை மணியகாரன் சந்தி பகுதியில் எதிரே துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த நபர் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அரச பேருந்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளானவர் பருத்தித்துறையை சேர்ந்த 38 வயதுடையவர் என்றும், உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தும்பளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம். யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை மணியகாரன் சந்தி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுபருத்தித் துறை சாலையிலிருந்து தும்பளை மணியகாரன் சந்தி ஊடக பொற்பதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தவேளை தும்பளை மணியகாரன் சந்தி பகுதியில் எதிரே துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்த நபர் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அரச பேருந்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார். விபத்துக்குள்ளானவர் பருத்தித்துறையை சேர்ந்த 38 வயதுடையவர் என்றும், உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.